புதுச்சேரி, மார்ச். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்

புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் 10,20,914 வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் ஆண் வாக்காளர்கள்- 4,79,329 ம், பெண் வாக்காளர்கள் 5,41,437ம், 148-மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். மேலும் அதில் முதல்முறை வாக்காளர்-28,403 பேர் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்  புதுச்சேரி மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் எனவும் மொத்த முள்ள 967 வாக்குச்சாவடிகளில் 237 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப் பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் தேர்தல் பணியில் 6-ஆயிரம் அரசு ஊழியர்களும், 4,745 போலீசாரும்,

12 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் (1,100) பணியில் ஈடுபட உள்ளதாகவும் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here