செய்தி சேகரிப்பு ராஜன்
ஆவடி, செப் . 3 –
திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தில் அமைந்துள்ள வேல் டெக் பல்கலைகழகம் மற்றும் மோரை ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.
இம் முகாம் வேல் டெக் பல்கலைகழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம் முகாமில் பல்கலை கழக வேந்தர் டாக்டர் ரங்கராஜன், சகுந்தலா ரங்கராஜன் ஆகியோரின் மேற் பார்வையில் 300க்கும் மேற்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி பல்கலைகழக பேராசிரியார்கள், ஊழியர்கள் குடும்பத்தினர்கள் போடப் பட்டது. நிகழ்ச்சியை பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் சாலி வாகணன் பதிவாளர் டாக்டர். கண்ணன் பேராசிரியர் டாக்டர். ரவிச்சந்திரன் மோரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கண்மணி வெள்ளாணூர் கிராம சுகாதார செவிலியர் இந்திய சுகாதார மேலாண்மை நிபுணர்களுக்கான சங்கத்தின் தலைவர் திரு.மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.