பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப் பட்ட நிலையில் கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி 3.7 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர் .
சென்னை; ஏப்.29-
கடந்த மார்ச் 14 முதல் 29 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வு நடைப் பெற்றது. அதில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணக்கார்களாய்,மொத்தம் 9,37,859 பேர் கலந்துக் கொண்டு,தேர்வு எழுதினர். அதில் மாணவர்கள் 4,68,570 பேரும், மாணவிகள் 4,69,289 பேரும் அடங்குவர் .
அத் தேர்வுக்கான தேர்ச்சி முடிவுகளை, இன்று காலை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. அதில் மொத்தம் 95.2% தேர்ச்சிப் பெற்றனர். அதில் மாணவியர் தேர்ச்சி 97.0% மாணவர்கள் தேர்ச்சி 93.3% ஆகும் இரு பாலருக்கும் இடையே உள்ள தேர்ச்சி வித்தியாசம் 3.7%ஆகும் .மொத்த தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் 3.7% பேர் கடந்த ஆண்டைப் போன்றே தேர்ச்சிப் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.