வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர். இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கான உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
ஜாப்ரா ஆர்சரை எப்படியாவது இங்கிலாந்து அணியில் சேர்த்துவிட வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இன்னும் சில வாரங்கள் சென்றால் ஜாப்ரா ஆர்சர் இங்கிலாந்து நாட்டு தேசிய அணியில் விளையாட தகுதி பெற்றுவிடுவார். இந்நிலையில் ஜாப்ரா ஆர்சர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.