திருவண்ணாமலை டிச.14-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வருகிற 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் பிஎச்டி படிப்பு வரை படிக்கும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2021-2022ம் ஆண்டுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேல்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையில் தகுதியான மாணவர்களிடமிருந்து கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) கல்வி உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here