ராமநாதபுரம், ஏப். 29-
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்புமுள்ள மாணவ மாணவியர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் கல்லுாரி மாணவ மாணவியருக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ேற்ப விஞ்ஞான ரீதியான பயிற்சி தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டுரங்கத்திலும் மாணவியருக்கு விளையாட்டு விடுதி சென்னை நேரு உள்ள விளையாட்டரங்கத்தஇலம் .ள்ளன.
சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்ற சிறப்நத விளையாட்டு வீரர்களாக விளங்குவதற்கு 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தகுதியுடையவர் ஆவர்.
தனிப்போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு/பாராதியார் தின விளயாட்டு போட்டிகள்/ அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள்/ இந்திய விளையாட்டு கூட்டமைப்பு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவருகளும் விண்ணப்பிக்கலாம்.