கும்பகோணம், மார்ச். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா திருபுவனம் காங்கேயம் பேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியைச் சேர்ந்த மாரியப்பன், மற்றும் திருபுவனம் காங்கேயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோரிடம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்காக தலா ரூ. 3 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 45 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மாரியப்பன் என்பவர் பணத்தை பெற்றுக் கொண்டு போலியான அடையாள அட்டை தயாரித்து கொடுத்ததோடு, போலி பணி நிரந்தர ஆணை உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, தற்காலிக வேலைக்காக அரசு போக்குவரத்து கழகத்திற்கு சென்று வேலை கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் ரூ. 3 லட்சம் வரை பணம் கொடுத்து பணி ஆணை மற்றும் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பெற்றுள்ளோம். என தெரிவித்து தங்களுக்கு வேலை வழங்குமாறு கேட்டுள்ளனர்.

அப்போது அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அவைகள் போலியானது என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டோர் மாரியப்பன், மற்றும் சந்தோஷ, உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு அதுக் குறித்து கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை. என்பதை அறிந்த அவர்கள் நாம் ஏமாற்றப்படுள்ளோம் என்பதை உணர்ந்து பாதிப்படைந்தவர்கள் அனைவரும் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டை பணி நிரந்தர ஆணை உள்ளிட்டவற்றுடன் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் அப்புகார் மனுவில் 15க்கும் மேற்பட்டோர் தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 45 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளோம் என்றும் மோசடியில் ஈடுபட்ட மாரியப்பன் மற்றும் சந்தோஷ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் அவர்களிம் கொடுத்த பணத்தை மீட்டு தருமாறு காவல்துறையிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, திருவிடைமருதூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here