மீஞ்சூர், மே. 20 –

திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் வயது 36 இவருக்கு திருமணம் முடிந்து இளவரசி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந் நிலையில் அரிகிருஷ்ணன் மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின் நிலையம் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாகம் இரண்டில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

தினமும் ஸ்ரீ பெரம்பத்தூர் சென்றுவர முடியாமல் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வீட்டிற்கு செல்வது வழக்கம்.மற்ற நாட்களில் ஊழியர்களின் குடியிருப்பில் வல்லூர் பகுதியில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று காலையில் ஆறு மணி ஷிப்டுக்கு வேலைக்கு சென்றவர் இரண்டு முறை மனைவியிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அதில் இருந்து செல்போன் அழைப்புகள் ஏதும் வராத நிலையில் சந்தேகம் அடைந்த இளவரசி மறு நாள் இன்று வெள்ளிக்கிழமை தொழிற்சாலை அதிகாரிகளை அணுகி கேட்டபோது அவர்கள் ஹரிகிருஷ்ணனின் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் இருக்கின்றன ஆனால் அவரை மட்டும் காணவில்லை என்றனர்.

இதுகுறித்து அவரது மனைவி இளவரசி மீஞ்சூர் காவல் நிலையத்தில் கணவனை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். விரைந்த சென்று விசாரணை மேற்கொண்ட  காவல்துறையினர் தொழிற்சாலையின் எல்லா பகுதிக்கும் சென்று சோதனையிட்டனர் அப்போது அவர் பணிபுரியும் டிபார்ட்மெண்ட் பக்கத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத செட்டில் கழுத்தில் தூக்கில் தொங்கியபடி அரிகிருஷ்ணன் இறந்துகிடந்தார்.

அவரது உடலை மீஞ்சூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் மீட்டு வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இச்சம்பவம் குறித்து கொலையா தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக அரிகிருஷ்ணன் இறந்து கிடந்த இடத்தில் பணிச்சுமை காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அக்கடிதத்தில் உள்ள கையெழுத்து என் கணவரின் கையெழுத்து அல்ல என இளவரசி கூறிவருகிறார். சந்தேகிக்கும் பொலிஸார் இவரை யாரேனும் கொலை செய்து உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here