கும்பகோணம், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆடுதுறை பேரூராட்சி சார்பில் விவேகானந்தர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உரை நிகழ்தும் போது பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டிற்காக செய்துள்ள சாதனைகள் இந்திய தேசியத்திற்கு கிடைத்துள்ள பெருமிதம் ஏன தெரிவித்தார்.
திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை பேரூராட்சி மற்றும் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் இணைந்து நடத்திய விவேகானந்தர் விளையாட்டு திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா அப்பகுதியில் உள்ள தனியார் மஹாலில் அப் பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அதில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், ராமகிருஷ்ணா மடம் தலைவர் விமூர்த்தானந்த மகராஜ், நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மேலும் அவ் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் பரிசுகளை வழங்கி உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆளுநர் இல.கணேசன் தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி சத்தியமாக எனக்கு தெரியாது. எனவும் அதுவே தனக்கொரு பலவீனம்தான். இருப்பினும் அதனை தெரிந்துக் கொள்ளாததும், ஒரு வேலை நல்லது தான் என தான் நினைப்பதாக அப்போது தெரிவித்தார்.
ஒரு சில கட்சிகளைச் சார்ந்த முதல்வர்கள் இருக்கிற இடத்தில் ஆளுநர்களுக்கும் அவர்களுக்கும் பிரச்சினை வருகிறது. மற்றவர்களுக்கு அது போன்ற பிரச்சனைகள் வரவில்லை. நான் இப்போது நாகலாந்திலும் இதற்கு முன்பு இருந்த மணிப்பூர் மற்றும் மம்தா பானர்ஜி இருக்கும் மேற்கு வங்காளத்திலும் இருந்த போது எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக தான் நடந்தது.
அதற்கு என்று வரைமுறையும், சட்டமும் உள்ளது. அதன்படி அவரவர்கள் நடந்து கொண்டால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. பஞ்சாப் மாநில ஆளுநர் என்னுடைய நல்ல நண்பர் தமிழ்நாட்டிற்கு மிகவும் அறிமுகமானவர். அவர் ராஜினாமா செய்ததை பத்திரிகைகள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். அது தவிர எனக்கு எதுவும் தெரியாது. ஒரு வேலை வயது முதிர்வு காரணமாக இருக்கலாம்.
பா.ஜ.க கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதலளிக்கையில்,
தேர்தல் நெருங்குவதால் எவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூட்டணி குறித்து பாஜக அறிவிப்பார்கள். தற்போது மியூசிக்கல் சேர் போன்று சுற்றிக் கொண்டு உள்ளனர். யார் எந்த சேரில் அமறுவார்கள் என்பது தேர்தல் தேதி அறிவித்தால் தெரியும் எனவும் மேலும், பாஜக ஆட்சி அமைக்குமா இல்லையா என்பதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் பிரதமராக நரேந்திர மோடி நாட்டிற்காக செய்துள்ள சாதனைகள் இந்திய தேசம் பெருமிதம் கொள்கிறதென்றார். இந்திய நாட்டின் குடிமகன் என்கிற முறையில் பொற்காலத்தை இட்டுச் செல்லக்கூடிய தலைமை அவரிடம் உள்ளது.
அந்த காலத்திற்கு அவர் தலைமையேற்று நடத்தும் பொழுது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது சாமானியன் என்ற கண்ணோட்டத்தில் ஒரு நம்பிக்கை. என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






















