கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டி தமிழகத்தின் பாசன மற்றும் குடிநீர் பயன்பாட்டை தடுக்க முயற்சிக்கும் ஆந்திரா அரசை கண்டித்தும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்திட கோரியும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துகோரியும், ஏரி, குளம் மற்றும் பாசன வாய்க்கால்களை உடனே தூர் வாரிடவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வசதியை மேம்படுத்த கோரியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அரையபுரம், தட்டுமால், படுகை விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட கோரியும் மேலும் திருஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் கரும்பு கொத்து மற்றும் மெது வடையுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் மாவட்ட செயலாளர் சாமு தர்மராஜன் தலைமையில் தலைமை தபால் நிலையம் முன்ர் அவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உரத்த குரல் முழக்கங்களை தொடர்ந்து எழுப்பியவாறு அக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர்.
பரபரப்புடன் நடைப்பெற்ற அவ்வார்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாரதி, ஒன்றிய செயலாளர் பாலன், நிர்வாகிகள் சரவணன், நாராயணன், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், அம்மாபேட்டை நிர்வாகிகள் குரு .சிவா, புருஷோத்தமன், சுரேந்தர், திருவையாறு நிர்வாகிகள் சக்கரவர்த்தி, பேச்சிமுத்து, கணபதி, பாபநாசம் நிர்வாகிகள் புகழேந்தி, கனகராஜ், ஜெகத்ரட்சகன், திருப்பனந்தாள் நிர்வாகிகள் ராமலிங்கம் சின்னதுரை, விஸ்வலிங்கம், கண்ணையன், திருவிடைமருதூர் நிர்வாகிகள் குமரப்பா, கல்யாணசுந்தரம், மணிவேல், ரவிசங்கர், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


















