ஆவடி: ஏப்.29-
ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி சாலையில் தனியார் ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தில் இரு தளங்கள் கொண்ட கட்டிடத்தை கடந்த 6 மாத காலமாக கட்டி வருகிறார். இந்த கட்டிடத்திற்கு ஆவடி பெருநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி என எதுவும் பெறாமல் கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடத்தி வந்த நிலையில், ஆவடி பெருநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் தெரிய வந்துள்ளது இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகார பகிர்வின் படி அனுமதி யின்றி கட்டப் பட்டு வரும் கட்டிடத் திற்கு கடந்த பிப்ரவரி 14ந்தேதி அன்று அனுமதி விண்ணப்பம் கோரி நகராட்சி சார்பில் அறிவிப்பு வழங்கப் பட்டும் . அது குறித்து கட்டிடத்தின் உரிமையாளர் அலட்சியம் செய்யும் விதத்தில் எவ்வித விண்ணப்பமும் நகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் சமர்ப்பிக்க வில்லை. இதனை யடுத்து கடந்த மார்ச் 23ந்தேதி ஆவடி நகராட்சி சார்பில் கட்டிடத்திற்கு பூட்டி சீல் வைக்கும் இறுதி அறிவிப்பை வழங்கி உள்ளது. அது குறித்தும் அவர் எந்த வித பதிலும் தராத இந் நிலையில், நேற்று காலை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலர்கள் அறிவிப்பின் பேரிலும், நகராட்சி ஆணையாளர் ஜோதிகுமார் உத்தரவின் பேரிலும் நகரமைப்பு அலுவலர் சுப்புதாய், நகரமைப்பு ஆய்வாளர்கள் தினகரன், காமதுரை, நிர்மலா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து. பின்னர், அதிகாரிகள் அனுமதி யின்றி கட்டப் பட்டு வந்த இரண்டு அடுக்கு கட்டிடத்தை பூட்டி சீல் வைத்ததாக அதிகாரிகள் கூறினர். மேலும், அவர்கள் கூறுகையில், ஆவடி நகராட்சி பகுதியான ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், அண்ணனூர், மிட்டினமல்லி, கோவில்பாதாகை, முத்தாபுதுப்பேட்டை, பருத்திப்பட்டு உள்ளிட்ட இடங்களில் 250க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் ஆவடி நகராட்சி சார்பில் திட்ட அனுமதியும், கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு, கட்டிட உரிமையாளர் உடனடியாக மேற்கண்ட அனுமதியை பெற்று கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.மீறும் பட்சத்தில் அனுமதின்றி கட்டப் பட்டு வரும் கட்டிடத்திற்கு பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.