திருவாரூர், டிச. 02 –

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடிவடிக்கைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டம் தமிழ்நாடு தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தலைமையில் நடைபெற்றது. மேலும் அக் கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து  அனைத்து துறை அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் தவறாது கலந்து கொண்டனர்.

தாழ்வான பகுதிகளில் ஏற்படும் மழை பாதிப்பு ஏற்படும் நிலையில் அதுக் குறித்து உடனுக்குடன் அனைத்துதுறை அலுவலர்களும் துரித நடவடிக்களை மேற் கொள்ள வேண்டும் என அமைச்சர் அக்கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

மேலும் மாவட்ட நிர்வாகம் தற்போது எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்து மேலும் துரிதப்படுத்தமாறு அலுவலர்களுக்கு அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து அவ்வாய்வுக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவிக்கும் போது, திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மக்கள்  பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படாதவாறு அதனை எதிர் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மாவட்ட நிருவாகமும் எடுக்க தயார் நிலையில் உள்ளதாக அப்போது அமைச்சர் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் இல்லாததை இருப்பதாக  தெரிவிக்கின்றனர்.எனக் குறிப்பிட்டார்.

சென்னையில் மழை பெய்த சற்று நேரத்திற்குள் வெள்ள நீர் வடிந்துவிட்டது. எனவும், தமிழ்நாடு முதலமைச்சரே நேரடியாக களத்தில் ஆய்வு மேற் கொண்டார் எனவும்,  தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக பணிபுரிகிறார்கள். திருவாரூரில் 126 மையங்கள் மிகத் தீவிர பாதிப்புக்கான மையங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கான அரிசி கையிருப்பில் உள்ளது. இந்த அரிசியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேவையான அனைத்து இடங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்காக அரசு மருத்துவர்கள் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். எனவும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மழை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அப்போது அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here