காஞ்சிபுரம், செப். 01 –
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவானைக்கோவில் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வழங்கிட குடிநீர் மேல் தேக்க தொட்டி ஒன்றினை கடந்த 2020 – 2021 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த குடிநீர் தேக்க தொட்டியின் நீர் கொள்ளவு 50 ஆயிரம் லிட்டர் ஆகும். இதனை அவ்வூராட்சி நிர்வாகம் சரியாக பரமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் குடிநீர் மேல் நிலை தேக்க தொட்டிக்கு ஏற்றப்படும் குடிநீர் முழுவதும் நிரம்பி வீணாகி வருவது தொடர்கதையாகவே உள்ளது.
எனவே வீணாக சாலையில் செல்லும் குடிநீரை தடுத்தி நிறுத்திட ஊராட்சி நிர்வாகம் சரியான நபர்களை பணியமர்த்தி இப்பிரச்சினைக்கு முடிவு மேற்கொள்ள வேண்டும் என திருவானைக்கோவில் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.