சென்னை, ஆக. 08 –
திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் பகுதி முனுசாமி தெருவில் அமைந்துள்ளது. திருக்குறள் மனவளக்கலை சங்கமம். உலகில் இதுவரை தந்தையர் தினம், தாயார்தினம், என்றுதான் தனித்தனியே கொண்டாடுகிறார்கள். மேலும், சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள்.
ஆனால் மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இதுவரை நடத்தப்படவில்லை, ஆண்கள் அனைவரும், பெண்மையின் பெருமையை உணர வேண்டும் எனவும், வாழ்க்கையில் ஆணின் வாழ்வில் உறுதுணையாக இருந்து அவர்தம் ஆற்றிய அர்ப்பணிப்பை போற்றி அவர்களை வாழ்த்திட வேண்டும் என்பது போன்ற பல்வேறு நோக்கங்களோடு, இச் சங்கமம் சார்பில் நேற்று மனைவி நல வேட்பு விழா நடைப்பெற்றது.
இத்தகைய செயல் ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து, பெண்மையின் பெருமையை உணர வேண்டும். என அச்சங்கமத்தினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனைவியினுடைய அருள் அன்னை லோகாம்பாள் பிறந்ததினம் ஆகஸ்ட் 30 தினத்தை மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டு அதனை வழக்கமாக கொண்டாடி வருகிறது.
இதனை தொடர்ந்து முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெரு மனவளக்கலை தவமையத்தின் உறுப்பினர், தலைவர்கள் மற்றும் 20 தம்பதியர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, மூத்த பேராசிரியர் குணசேகரன், ஐசிஎப் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சம்பத்குமார், மற்றும் சுந்தரம் அவர்களின் உயிர் கலப்பு தவம் நடைபெற்றது. விழாவின் சிறப்புரை பேராசிரியர் கிரிஜாபாஸ்கர் தம்பதிகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தங்களின் மேலான கருத்துக்களை அனைவருக்கும் பகிர்ந்தார்.
உயிர கலப்பு தவம் –
அனைவரும் ஒரே அரங்கத்தில் அமர வைக்கப்பட்டு, தம்பதியர்கள் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து, கரங்களை பிடித்தபடி கண்களை மூடி தியானம் செய்து, காந்த பரிமாற்றம் ஏற்படும். இதன் சிறப்பு அம்சம் கணவன் மனைவி இணக்கம், விட்டுக்கொடுத்தல், நான் என்னும் அகங்காரம், சகிப்புத்தன்மை, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து குடும்ப ஒற்றுமை ஏற்படும். வாழ்க்கை இனிமையாக அமையும் என்பது ஐதீகம் என்றனர்.