கும்பகோணம், ஜன. 1 –

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை, அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். இதில் இன்று “2022”  ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு விஷேச திருப்படி பூஜை நடைபெற்றது.  அறுபது படிகளிலும் திருவிளக்கேற்றி சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும் இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம். மேலும், இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார். என்பதும், வரலாறு எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஒவ்வொரு ஆங்கில வருட பிறப்பின் போதும் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத பிரஜோத்பத்தி என தொடங்கி குரோதன, அட்சய என முடிவுறும் 60 தமிழ் வருட படிக்கட்டுகளுக்கும் விசேஷ திருப்படிப்பூஜை செய்வது வழக்கம், அது போல இன்று 2022 ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு ஒவ்வொரு படிக்கட்டிலும் மஞ்சள், கும்குமம் இட்டு ஐந்து முக திருவிளக்கு ஏற்றி வெற்றிலை, தேங்காய், பூ, பழம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சமுக கற்பூரதீபம் காட்டி மகா தீபாராதனை செய்யப்பட்டது‌.

காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் திருப்படி பூஜையில் பங்கேற்று, திருப்படிகளில் திருவிளக்கேற்றினர் மேலும் இன்று மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பெற்று, சண்முகா அர்ச்சனையும் நடைபெற்றது தங்ககவசம், வைரவேலுடன் இராஜஅலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை காண வந்த பக்தர்களை முருகனுக்கு அரோகரா அரோகரா என்று கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் போராட்டம் நடைபெற்றது என்று அறிவித்த நிலையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here