இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெருக்கும் வகையில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில்  புதிய தொழில் நுட்ப பிரிவுகளை உருவாக்கவும், புதிய தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்கவும்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

சென்னை, ஜூலை 27-2021-

 

இன்று ஜூலை 27-2021 தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பற்ற தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.

இக்க கூட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர் பள்ளி கல்லூரிகளில் இளைஞர்களுக்கு ஏற்ப புதிய தொழிற் பயிற்சி நிலையங்களை துவக்குதல் , மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற் நுட்ப பிரிவுகளை தேவைப்படும் இடங்களில் துவக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான உண்மையான பலன் தரும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப் படவேண்டும் எனவும் , தொழிற் சாலைகளின் எதிர்கால தேவைக்கேற்றவாறு பயிற்சியாளர்களுக்கு நவீன தொழிற்நுட்பங்களில் பயிற்சி வழங்கவும் , அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டுமான திறன் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்றார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆற்றி வரும் பணிகள் அமைப்புச்சாரத தொழிலாளர்கள் நல வாரியங்களின் செயல்பாடுகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள்,வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் நெறி வழி காட்டுதல், தொழில் பயிற்சி நிலையங்களின் செயல்பாடுகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவ மனைகள், மருந்தகங்கள் மற்றும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவைக் குறித்தும் அவர் ஆய்வுகள் மேற் கொண்டார்.

தொழிலாளர்களுக்கு நலத்திட்ங்களை விரைவுப்படுத்தல்;

மேம்பாட்டுத்துறையின் கீழ் தற்போது 18 அமைப்புச்சாராத் தொழிலாளர் செயல்பட்டு வரும் நலவாரியங்களில் 30 இலட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துவுள்ளனர். அவர்கள் கல்வித்தொகை, திருமணவுதவித்தொகை, விபத்து நிவாரணம்,ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்டவுதவிகளை பெற்று வருகின்றனர். அவர்கள் கோரும் நலத்திட்ட மனுக்களின் மீது விரைவாக தீர்வு கண்டு பயனாளிகளுக்கான பலன்கள், நலத்திட்ட உதவிகள் குறித்த நேரத்தில் கிடைத்திட உறுதி செய்ய வேண்டும் என்றார்.

அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கவும் அவர்களுக்கு வழங்கப்படும் அவைகளை ஒருங்கிணைத்து அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக கைப்பேசி செயலினியை உருவாக்கிடவும்,தொழிலாளர் துறையில் அதிக அளவிலான சேவைகளை இணைய வழியாக்கி தொழில் புரிவதை சுலபமாக்கிடவும்,தொழிலாளர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். அரசின் திறன் மேம்பாட்டு தொடர்புடைய திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைய வேண்டும்,

வேலையற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில் தொழில் நிறுவனங்களின் தேவை சார்ந்து , வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான விர்ச்சுவல் ரியாலிட்டி, க்ளவுட் கம்யூட்டிங்க் 3-டி பிரிண்டிங், சைபர் செக்யூரிட்டி ஆகியவற்றில் திறன் பயிற்சிகள் வழங்கவும், தோட்டக்கலை மற்றும் விவசாயம் சார்ந்த கருவிகளின் பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தினார். மேலும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து மகளிர் மற்றும் கிராமப் புற இளைஞர்களுக்கு நாட்டுக் கோழி மற்றும் கறவை மாடு வளர்ப்புக் குறித்து திறன் பயிற்சி வழங்குதல், மாநில அளவில் ஒருங்கிணைந்த திறன் பதிவை உருவாக்குதல் ஆகியன குறித்தும் இவ்வாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.மேலும், அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பயன் பெறும் வகையில் , வேலைவாய்ப்புத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் தனியார் வேலை வாய்ப்பு இணையத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பு நிறுவனங்களை இணைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டர்.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் அதிகமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் மருத்துவமனைகள் துவங்கப் பட வேண்டும் எனவும்,அனைத்து மருந்தகங்களிலும் ஆய்வக வசதிகள் உருவாக்கவும், கூடுதலாக ஆயூஷ் மருத்துவ பிரிவுகள் உருவாக்கப் பட வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தால் இணையத்தளம் மூலம் ஏற்கனவே வழங்கப்படும் சேவைகளுடன் சுலபமாகத் தொழில் நடத்தும் வசதிகளைத் தொழில் முனைவோருக்கு ஏற்படுத்தித் தருவதாகற்காக வளைதளத்தில் சில மாற்றங்களை செய்யவும் மேலும் சேவைகளைக் கணினி மயமாக்கவும் ஆய்வு மேற் கொள்ளப் பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைச் செயலாளர் இரா.கிர்லோஷ் குமார்,தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்கநர் முனைவர் சி.என்.மகேஷ்வரன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீர ராகவராவ் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாரதார இயக்கக இயக்குநர் கே.ஜெகதீசன் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ( தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் ) மரு.ஜி.அசோக்குமார் மற்றம் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.   

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here