கொட்டிவாக்கம், மார்ச். 09 –
சென்னை கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் வைதேகி தெருவில் வசித்து வரும் சுமார் 45-வயது மதிக்கதக்க சுமதி என்ற பெண்மணி அவர் கையில் எடுத்து வந்த சுமார் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனில் பேசியபடி அச் சாலையில் நடந்து சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் சுமதி பேசிக் கொண்டிருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
செல்போனை பறிக் கொடுத்த அப்பெண்மணி பைக்கில் தப்பி சென்ற இளைஞர்களை பிடிக்க கூச்சலிட்ட படி பின் தொடர்ந்து ஓடிவுளாளர். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக தப்பி சென்று மறைந்தனர்.
இச் செயலில் ஈடுப்பட்ட இளைஞர்கள் குறித்து அருகில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் அருகில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது இளைஞர்கள் இருவர் செல்போனை பறித்துகொண்டு தப்பி சென்றதும், அவர்களை சுமதி துறத்தி சென்றதும் பதிவாகியிருந்தது.
பின்னர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைபற்றிய போலீசார் செல்போன் பறித்துக்கொண்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள போதே துணிச்சலாக செல்போன் பறிப்பில் இளைஞர்கள் இருவர் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.























