திருவாரூர், ஜூலை. 12 –

திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் நேற்று முன் தினம் மாலை மாலை 4 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் மண்டலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

மேலும் இக்கூட்டத்தில் எதிர் வரும் ஜூலை 23 ஆம் தேதியன்று, பாஜக சார்பில் தமிழகம் தழுவிய அளவில் நடைபெறயிருக்கும், ஊராட்சி மற்றும் வார்டுகள் அளவிலான ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

மாவட்ட பாஜக தலைவர் எஸ் பாஸ்கர் தலைமை வகிக்க, மாவட்ட பொதுச் செயலாளர் சி செந்தில் அரசன் வரவேற்புரை நிகழ்த்த, மேலும் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை B சிவா, மாநில விவசாய அணி செயலாளர் கோ வி சந்துரு, பட்டியல் அணி மாநிலத் துணைத் தலைவர் உதயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோட்டூர் ராகவன் சி.எஸ். கண்ணன் மற்றும் ரங்கதாஸ் மாவட்ட பொதுச் செயலாளர்கள் முத்துப்பேட்டை ராஜேந்திரன் , விகே செல்வம் ஆகியோர் பங்கேற்க, இக்கூட்டம் பலமணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்றது.

முதலாவதாக இக்கூட்டத்தில் கடந்த மாதம் 30 நாட்களில் 24 நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி, திறன்பட செயல்பட்ட நிர்வாகிகளுக்கு, பாராட்டு மற்றும் நன்றியினை மாவட்ட தலைவர் பாஸ்கர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரை நிகழ்த்தும் போது, வர இருக்கின்ற ஜூலை 23ஆம் தேதி மாநில தலைமையின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஊராட்சி மற்றும் வார்டு அளவிலான ஆர்ப்பாட்டம் நடைப்பெறவிருக்கிறது. எனவும், மேலும் அவ்வார்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் வகையில் இருந்திட வேண்டும் எனவும்,

மேலும் இப்போராட்டத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதுக் குறித்தும், போராட்டத்திற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற் கொள்ள வேண்டும் என அப்போது நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

வரும் ஜூலை 28ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் என்ற மாபெரும் நடை பயண துவக்க விழா நிகழ்ச்சி ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது இந்த விழாவிலும் மாவட்ட முழுவதும் உள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்

மேலும் மாநில தலைவர் அண்ணாமலை திருவாரூருக்கு வரும் பொழுது என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் பற்றியும் பேசப்பட்டது கூட்டத்தில் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா மற்றும் கோட்டூர் ராகவன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்தார்கள்.

இவர்களுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டல அளவிலான தலைவர்களுடன் அவரவர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடைப்பெற்றது. மேலும் கட்சி நிர்வாகிகள் மக்களுக்காக எப்படி பணியாற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் வழங்கினார்கள்.

மாவட்டத் துணைத் தலைவர்கள் சதா சதீஷ், முத்துப்பேட்டை மாரிமுத்து,நீடாமங்கலம் ஜெயக்குமார் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள  மண்டல் தலைவர்கள் திருவாரூர் சந்திரசேகர் நன்னிலம் மாரியப்பன் கொரடாச்சேரி ஐயப்பன் ,களத்தூர் ரங்கா, திருத்துறை பூண்டி ஐயப்பன் முத்துப்பேட்டை  அன்பழகன் நீடாமங்கலம் வடக்கு சிவ பிரபாகரன் , மன்னை மேற்கு ஒன்றியம் செல்வம் குடவாசல்வடக்கு விஜயகுமார்  கூத்தாநல்லூர் பிரபாகரன் மண்ணை கிழக்கு பிரசாத் அனைத்து ஓ பி சி அணி மாவட்ட தலைவர் பாலபாஸ்கர் விவசாய அணி அப்ரூவ் ரவீந்திரன் மாவட்ட மகளிர் அணி தலைவி ரமாமணி அணி பிரிவு தலைவர்கள் கழுகு சங்கர் எட்டியலூர் சிவா கொரடாச்சேரி பிரபாகரன் சிறுபான்மை அணி கமாலுதீன் கலை கலாச்சார பிரிவு அய்யன், வடகுடி சோமசுந்தரம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில்  சிறப்பித்த அனைவருக்கும் திருவாரூர் நகர தலைவர் கணேசன், நன்றி கூறினார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here