சென்னை, மே. 10 –  

நேற்றிரவு மழை பொய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட வாகன விபத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த நபரை ரோந்து பணியில் இருந்த இரு போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சிக்னலில் யுடர்ன் போட்ட இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானர்கள். மேலும், நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் நடைபெற்ற விபத்தில் சிக்கிய இருவரில் பரிவத ஸ்ரீசாய் வெங்கடச்சலம் என்ற 20 வயது இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் விழுந்தவாறு போராடி கொண்டிருந்தார்.

மழை பெய்ததால் விபத்தில் சிக்கிய நண்பனை சாலையின் ஓரமாக படுக்க வைத்து விட்.டு சாலையில் செல்லும் அனைத்து வாகான ஓட்டிகளிடமும் உதவி கேட்டுள்ளார். மழையால் யாரும் உதவிட முன்வராத நிலையில் உடனிருந்த நண்பனின் செல்போன் உடைந்திருந்ததால். ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் செய்வதறியாது பதட்டத்தில் இருந்த பரிவாத ஸ்ரீசாயின் நண்பர் அவ்வழியாக வந்த சிவப்பு பேட்ரோலில் ரோந்து பணியில் ஈடுபட்ட குரோம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலசந்தர், சிறப்பு காவல்படை இரண்டாம்நிலை காவலர் ராஜு ஆகியோரிடம் உதவி நாடிவுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் சிவப்பு பேட்ரோலில் ரோந்து பணியில் ஈடுபட்ட குரோம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலசந்தர், சிறப்பு காவல்படை இரண்டாம்நிலை காவலர் ராஜு ஆகியோர் விபத்தில் சிக்கிய நபரை மீட்டு அவர்கள் பணியில் ஈடுப்பட்ட வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.

கொட்டும் மழையில் விபத்தில் சிக்கியவரை மீட்க அரசு இலவச ஆம்புலன்ஸை அழைத்தும் வராத நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் விபத்தில் சிக்கியவரை மீடடு மருத்துவமனையில் அனுமதித்த மனித நேயத்துடன் செயல்பட்ட அந்த போலீசார்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

விபத்துக்குள்ளாக்கிய லாரியை சாலையில் விட்டு விட்.டு ஓட்டுநர் தப்பி ஓடியதால் போக்குவரத்துக்கு புலனாய்வு பிரிவு போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட.டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here