தஞ்சாவூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
வலதுகாலை எடுத்து வைத்து வீட்டின் உள்ளே போவது போல ஒரு விளம்பரம் டிவி ல பார்த்து இருப்போம். அதை போல சிறுவர் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தஞ்சை மேயர், ஆணையர். துனண மேயர் ஆகியோர் ஒரு சேர வலது காலை எடுத்து வைத்து பூங்கா உள்ளே சென்றனர். பின்னர் ஊஞ்சலில் அமர்ந்து சிறு பிள்ளைகள் போல் 3 பேரும் ஆடி மகிழ்ந்தனர்.
தஞ்சை புதிய காவேரி நகர் குடியிருப்பு பகுதியில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுவர்களுக்கான பூங்காவை தஞ்சை மாநகராட்சி ஆனணயர் மகேஷ்வரி, மேயர் சண். இராமநாதன், துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் அனைவரும் ஒரு சேர வலது காலை எடுத்து வைத்து பூங்காவிற்குள் சென்றனர்.
பூங்காவை பார்வையிட்டு வந்தவர்கள் ஊஞ்சலை பார்த்ததும் மூவரும் உற்சாகம் அடைந்தனர். சிறு பிள்ளைகள் போல் அப்போது மூன்று பேரும் ஊஞ்சலில் அமர்ந்து ஆடி மகிழ்ந்தனர்.























