தஞ்சாவூர்,பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 311 ஆம் வாக்குறுதியாக கூறியுள்ளபடி சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
மேலும் அப்போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உரத்த குரல் முழக்கங்களை அவர்கள் தொடர்ந்து எழுப்பினார்கள். மேலும் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசுக்கு அப்போது அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். காலையில் தொடங்கிய அப்போராட்டம் தொடர்ந்து நடைப் பெற்று வருகிறது.
பேட்டி: ஜான்சி ஆசிரியை