செங்கல்பட்டு, அக். 15 –
செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 7 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் இருவர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர் 5 பேர் மட்டும் இறுதியில் போட்டியிட்டு களத்தில் இருந்தனர். அதில் சுயேட்சை வேட்பாளராக களத்தில் நின்ற பொறியாளர் டி. சிந்துலேகா வெற்றிப் பெற்றார்.
கடந்த செப் 6, மற்றும் 9 தேதிகளில் இரு கட்டமாக நடைப்பெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டிட்ட சுயேட்சை வேட்பாளர் பொறியாளர் டி.சிந்துலேகா வெற்றிப் பெற்றுள்ளார். அவ் வெற்றியைப் பாராட்டும் விதமாக ஜெய்சிவசேனா செங்கல்பட்டு நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அவருக்கும் , அவரது வெற்றிக்கு உறு துணாயாக இருந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் பா.தாமோதரனுக்கும், மேலும் அவரைத் தேர்ந்தெடுத்த முடிச்சூர் ஊராட்சிப் பகுதி மக்களுக்கும் அவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், 12 வார்டு உறுப்பினர்களைக் கொண்ட முடிச்சூர் ஊராட்சி வார்டுகளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்ற 1வது வார்டு க.மணிகண்டன், 2வது வார்டு ச.விஜயா, 3வது வார்டு அ.வினாயக மூர்த்தி, 4வது வார்டு ஆர்.சாந்தி, 5வது வார்டு க.சசிகலா 6வது வார்டு அ.சாந்தகுமார் 7வது வார்டு சு.உமா 8வது வார்டு அ.அருள் 9வது வார்டு என்.சரஸ்வதி 10 வது வார்டு வி.ரவீந்திரகுமார் 11வது வார்டு அ.புனிதா அல்போன்ஸ் 12 வது வார்டு ச.சத்தியா ஆகிய 12 வார்டு உறுப்பினர்களுக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
இப் பகுதி பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் எந்தவித தங்கு தடைகள் இல்லாது விரைவாக மக்களுக்கு அத்திட்ட நலன்கள் கிடைக்க தீவிரமாக செயல் பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜெய் சிவசேனா ஒருங்கிணைப்பாளர் கி.சுப்பிரமணி மற்றும் 8 வது வார்டில், வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட சு.குப்பு அவர்களும் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் பொறியாளர் டி. சிந்துலேகாவை நேரில் சந்தித்து பொன்னாடைப் போர்த்தி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.