நன்னிலம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்தில் வெயிலில் அவதிப்படும் பயணிகள், மேற்கூரை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து… சென்னை, திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட பேருந்துகள்.. மற்றும் 7 நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டது..
நன்னிலம் மற்றும் அதனை சுற்றி பல்வேறு கிராமப் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் நன்னிலம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்து வந்தனர்..
பழைய பேருந்து நிலையம் போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால்..இட பற்றாக்குறை ஏற்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்..
இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் பழையபேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
தற்போது புதிதாக விஸ்திரிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கோ நிற்பதற்கோ இடமின்றி வெயிலிலும், மழையாலும் நிற்கும் நிலை உள்ளது… எனவே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள்… மற்றும் நிழல் தரும் வகையில் கூரை அமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
பேட்டி: செல். சரவணன்,
சமூக ஆர்வலர்,
நன்னிலம்.























