பொன்னேரி, ஆக. 01 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 37 வருடங்களாக எவ்வித புகாருக்கும் உட்படாமல் கடமையாற்றி இன்று ஓய்வு பெறும், அலுவலக உதவியாளர் நாகரத்தினம் என்பவருக்கு பாராட்டு விழா இன்று அவ்வலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மேலும், மீஞ்சூர் ஒன்றியம், நாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம். என்பவர் கடந்த 1986 ஆம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்ற தொடங்கினார்.

ட்ரங்க்கால் எனப்படும் தொலை தொடர்பு சாதனம் இயக்கப்பட்ட அந் நாளிலிருந்து, வாகன வசதிகள் இல்லாத சிரமமான நாட்களை கடந்து 1996 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் முதல் முதலாக வெளியிட்ட போது அதற்கான பணிகளில் தன்னை கடுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டுள்ளார். மேலும், கடந்த 37 வருடங்களாக பல்வேறு உயர் அதிகாரியிடம் பணிபுரிந்து, அவர்களிடமும் மற்றும் பொதுமக்களிடமும் நற்பெயர் பெற்றவராக இந்நாள் வரையில் தன்னை முழுமையாக அப்பணியில் ஈடுப்படுத்திக் கொண்டு செயல் பட்டு வந்துள்ளார் என அவருக்கு நடைப்பெற்ற அவ்விழாவில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனைத்து சக பணியாளர்களும் அவருக்கு புகழாரம் சூட்டினார்கள்.

தொடர்ந்து அவருக்கு அத்துறைச்சார்ந்த அனைத்து ஊழியர்களும் ஆள் உயர மாலை அணிவித்தும், பொன்னாடைப் போர்த்தியும், நினைவு பரிசுகளை வழங்கியும் மரியாதை செலுத்தினார்கள்.

மேலும், தொடர்ந்து அவருக்கு பிரியாவிடை தந்து உள மகிழ்வுடனும் ஆனந்த கண்ணீரோடும் மேலும் அனைவரும் நெகிழ்ச்சிப்பெருக்கில் இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தனி வட்டாட்சியர்கள் சித்ரா, ரமேஷ் மண்டல துணை வட்டாட்சியர்கள் சிவகுமார் விஜயலட்சுமி மற்றும் வருவாய் துறை ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்துகொண்டு அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here