திருவண்ணாமலை அக்.21-

திருவண்ணாமலை மாவட்டம்  சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில் தற்போது 97.45 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் விளைவாக உபரிநீரை சாத்தனூர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தார்.

இதில் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற் பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள் சிவக்குமார், ராஜேஷ், மதுசூதனன், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) கே.பி.மகாதேவன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சாத்தனூர் அணையின் முழுநீர் மட்டம் 119 அடி அணையில் உள்ள 20 ஷட்டர்களை உடைத்து அப்புறப்படுத்தி புதிய ஷட்டர் பொருத்தும் பணி நடைபெறறு வருகிறது. இப்பணி முடிய இன்னும் ஓராண்டுகாலம் ஆகும். அதனால் தற்போது தண்ணீர் 99 அடி வரை மட்டுமே தேக்க முடியும் மேலும் 99 அடி வரை தேக்க கடந்த ஜூன் 21ந் தேதி அன்று அரசாணை பெறப்பட்டுள்ளது. 99 அடி மேல் வரும் தண்ணீரை அணையின் கீழ் வரும் ஏரிகள் மற்றும் பாசன நிலங்களுக்கு கொடுக்க அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்துள்ளதால் தற்போது அணையின் நீர்மட்டம் 97.45 அடியாகும்.

நீர்வரத்து விநாடிக்கு 1343 கனஅடி ஆகும் . மேலும் ஓரிரு நாட்களில் 99 அடியை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 1343 கன அடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுற கால்வாயின் கீழ் உள்ள ஏரிகளை நிரப்ப 500 கன அடி வீதமும் திருக்கோயிலூர் பழைய ஆயக்கட்டுக்கு (5ஆயிரம் ஏக்கர்) வினாடிக்கு 843 கனஅடியும் வழங்கப்டும். இதன் மூலம் திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 12,152 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here