திருவண்ணாமலை, ஆக 1-

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர்.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இளங்கோவன், மாவட்ட ஊராட்சி செயலர் அறவாழி, செயல் அலுவலர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், மோகனசுந்தரம், ஒன்றிய குழுத் தலைவர் அ.ராணி அர்ஜுனன், தாசில்தார் கோவிந்தராசன், சமூக நல தாசில்தார் அரிதாஸ், செயற்பொறியாளர் அம்சா, வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு, மருத்துவர்கள் விக்னேஷ் கோமதி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பணிகள்;

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட் சிறப்பு நிலை பேருராட்சிக்கு உட்பட்ட மோரக்கன்னியனூரில் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டம் 2020-2021 கீழ் 1 கி.மீ தூரம் ரூ.49.02 இலட்சம் மதிப்பிட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருதை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டர். மேலும் துளசிராமன் குளத்தில் ரூ.25 இலட்சம் தடுப்பு சுவர் மற்றும் கருங்கல அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்ட அவர் சேத்துபட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் சதிஷ்குமார் என்பவருக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் 2020-2021 கீழ் ரூ.2.10 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சேத்துப்பட்டு வட்டாசியர் அலுவலக வளாத்தில் மற்றும் மொடையூர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் அங்கு நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 18 முதல் 45 வயது உள்ள ஆண் 85 நபர்களும் பெண்கள் 48 நபர்களும் 45 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் 38 நபர்களும், பெண்கள் 35 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா விழிப்புணர்வு;

சேத்துபட் வட்டாசியர் அலுவலகத்தின் அருகே உள்ள வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் நேரில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான அவசியத்தை குறித்து அறிவுறித்தினார்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணி

சேத்துபட்டு ஊராட்சி ஒன்றியம் இடையான்குளத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்பு திட்டத்தின் கீழ் ரூ.2.27 இலட்சம் மதிப்பில் கட்டிய ஆட்டு கொட்டாயினை ஆய்வு செய்தார், அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்பு திட்டத்தின் கீழ் ரூ. 10.13 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அகங்கன்வாடி மையத்தினை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் தச்சாம்பாடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்பு திட்டத்தின் கீழ் ரூ.1.07 இலட்சம் மதிப்பில் பசுமை கிராம ஊரட்சி மரக்கன்றுகளை நட்டு பணியினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மொடையூர் கிராமத்தில் கருங்கல் கொண்டு செய்ப்படும் சிற்பங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here