ராமநாதபுரத்தில் காவல்துறை சார்பாக நடந்த தன்னார்வ ரத்ததான முகாமை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ரத்ததானம் செய்து துவக்கி வைத்தார். ராமநாதபுரம் கூடுதல் காவல் கண் காணிப்பாளர் தங்கவேலு, ராமநாதபுரம் காவல் துணை கண் காணிப்பாளர் நடராஜன் மற்றும் மருத்துவ அதிகாரி டாக்டர் சாதிக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் மாவட்ட தாலுகா காவல் ஆளினர்கள், ஆயுதப்படை காவல் ஆளினர்கள், கமுதி தனி ஆயுதப்படை காவல் ஆளினர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 113 பேர் ரத்ததானம் செய்தனர். ராமநாதபுரம் ரத்த வங்கி டாக்டர் பத்தூல் ராணி பாத்திமா, சிவகங்கை ரத்தவங்கி மருத்துவர் தென்றல் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம், சிவகங்கை ரத்த வங்கி மருத்துவ குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். முகாமை மாவட்ட ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் ஒருங்கிணைத்தார்.