மீஞ்சூர், மே. 10 –
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் சார்பில் மீஞ்சூர் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமையிலும், மாவட்ட அவைத்தலைவர் மு. பகலவன், மாவட்ட துணை செயலாளர் மு.கதிரவன் முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன், உள்ளிட்டவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
மேலும் ஈராண்டு சாதனை விளக்க கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் வருகை தந்தார்.
தொடர்ந்து அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஈராண்டு ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களுக்கு கிடைத்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மேலும் அதனால் சமூகத்தில் மேன்மையடைந்தவர்கள் நிலை, மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து அக்கூட்டத்தில் விளக்கமாக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புடன் பணியாற்றிய திமுக பொறுப்பாளர்களுக்கும், பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் திராவிட மாடலின் வெற்றிக்கு சிறப்பாய் விளங்குவது வேரா, விழுதா,என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது,
மேலும் இவ்விழாவில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் கே. ஜி.பாஸ்கர்சுந்தரம், மீஞ்சூர் பேரூர் திமுக தலைவர் ருக்மணி மோகன்ராஜ், நகர திமுக செயலாளர் மீஞ்சூர் தமிழ் உதயன், பொன்னேரி வழக்கறிஞர் ரவிக்குமார், மீஞ்சூர் பேரூர் திமுக துணைத் தலைவர் பா. அலெக்சாண்டர், இளைஞர் அணி அமைப்பாளர் தமிழரசன், நாலூர் சங்கர். உள்ளிட்டவர்களும் திரளான திமுக கட்சியினரும் கலந்து கொண்டனர்.. இவ்விழாவின் நிறைவில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் இந்திரா சங்கர், ஏ.எம்.ஆர். முரளி உள்ளிட்டவர்கள் நன்றிவுரை நிகழ்த்தினார்கள்.























