இராமநாதபுரம் ; ஜூன் , 21 –
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பத்து மாவட்ட பொது மக்கள் கலந்துக் கொண்டு மனு அளித்திடும் வகையில் தேசிய குழந்தை உரிமைகள், பாதுகாப்பு சிறப்பு ஆணைய அமர்வு கூட்டம் இன்று நடைப் பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்தலைவர் பிரியாங்க் கனூங்க் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் என்.பி.நிர்மலா , தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், ஆகியோர் இராமநாதபுரம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிக்கான காசோலைகளை வழங்கினார்கள் .
மேலும் பத்து மாவட்ட பொதுமக்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்.கொ.வீர ராகவ ராவ், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.ஜெயகாந்தன் இராம்நாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா மற்றும் ஆணைய உறுப்பினர்கள் உள்ளனர் .