ஆனந்தூர் ஆக 6 –
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் பகுதியில் உள்ள பெரிய ஊரணி ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த ஊரணி நன்கு பயன் படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன் பாட்டில் இல்லாமல் ஊரணியை கழிவுநீர் தேக்கும் குளமாக உருமாறி விட்டது.
இதனால் இப் பகுதியில் துர் நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது கொரோனா நோய் பரவிவரும் நிலையில் இது போன்ற அசுத்தமான நீர் நிலைகள் மேலும் நோயை பரவ செய்யும் கேந்திரமாக மாறி வருகிறது. இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு பெரிய ஊரணியை தூர்வாரி சுத்தம் செய்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மமக கிழக்கு மாவட்ட தலைவரும் சமூக ஆர்வலருமான பட்டானிமீரான் கோரிக்கை விடுத்துள்ளார்.