தஞ்சாவூர், ஏப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

சப்பர தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவர்களின் உருவபடத்திற்கு மலர் தூவியும் – மெழுகுவர்த்தி ஏந்தியும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர் களிமேடு பகுதியில் அப்பர் சப்பர விழாவின் போது சப்பரம் சாலை ஓரம் இருந்த உயர் மின்னழுத்த கம்பி மீது உரசியதில், சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தின் இராண்டாம் ஆண்டை முன்னிட்டு உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மலர்கள் தூவியும் –  மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய களிமேடு சப்பரம் தீவிபத்தில் பலியான 11 பேர்கள் நினைவாக எழுப்பபட்ட நினைவு தூண் திறக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரித்தனர். களிமேடு கிராம மக்கள்.

கடந்த 27.04.2022ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் சப்பரம் விழா நடைப்பெற்றது கிராமத் தெருக்களில் வலம் வந்த சப்பரம் பூதலூர் சாலையில் வந்த போது சாலையோரத்தில் இருந்த உயர் மின் அழுத்த கம்பி சப்பரத்தின் உச்சியில் உரசியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவர்கள் உள்பட 11 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.

தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி உயிர் இழந்த 11 பேரின் நினைவாக கிராம மக்கள் சார்பாக களிமேடு கிராமத்தில் நினைவு தூண் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. அதில் பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக நினைவு இடத்திற்கு வந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த உயிர் இழந்தவர்கள் புகைப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி இனிப்புகள், பழங்கள் வைத்து படையலிட்டு மலர் தூவி வழிபட்டனர். ஓதுவார்கள் திருமுறை பாடி  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

களிமேடு தேர் விபத்தில் உயரிழந்த 11 பேர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் : தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் உரை ..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here