மீஞ்சூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தத்தைமஞ்சி ஊராட்சிப் பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் நகர் இருளர் காலனியில் 45 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி குடிசை வாழ் மக்களின் குடியிருப்புப் பகுதியில் மின்மாற்றி ( டிரான்ஸ் பார்மர் ) அமைக்கப் பட்டுள்ளதால் அதிலிருந்து செல்லும் மின் வயர்களும் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளதால். காற்று, மழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலங்களில் மின் வயர்கள் ஒன்றுக் கொன்று உரசி உராய்வின் காரணமாக அதிலிருந்து அடிக்கடி தீ பொறிக் கிளம்பியும் மேலும் மின் தடைகள் ஏற்பட்டும் மேலும் மின் சப்பளை உள்ளபோதை மின் கம்பிகள் அறுந்து வீட்டின் கூரை மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் விழுந்து ஆபத்துக்களை விளைவிக்கும் சூழல் தொடர்ந்து இருந்த படியே இருந்து வந்துள்ளதாகவும்,
மேலும் அப்பிரச்சினை தொடர்பாக பலமுறை மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கைகளையும் அந் நிர்வாகம் எடுக்காததால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவ்வூர் மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்புகார் மனு மீது மாவட்ட நிர்வாகம் கடந்த 30 12 2023 அன்று அம் மின் மாற்றியை அவ்விடத்தில் இருந்து மாற்றச் சொல்லி விரிவான ஆணையினை நேரடியாக பொன்னேரி செயற்பொறியாளருக்கும், அதன் நகல் கூடுதல் ஆட்சியர் – வ ஊராட்சி முகமை திருவள்ளூர், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலகம், மற்றும் அவர் வாயிலாக தத்தைமஞ்சி ஊராட்சி தலைவருக்கும் பரிந்துரைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் ஆணையை சிறிதும் ஹானர் செய்யாமல் கிடைப்பில் போட்டதின் விளைவாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மின்சார விபத்தில் அப்பகுதியில் இருந்த இரண்டு குடும்பங்களைச் சார்ந்த சுரேஷ், பொன்னி, மாரியம்மாள் ஆகியோர் மீது மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்..
மேலும் மின்சாரம் தாக்கி அசம்பாவிதம் ஏற்பட்டு மூன்று பேரின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் அளவிற்கு அபாயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசு சார்பில் இதுவரை எவ்வித உதவிகளும் செய்து தரப்படவில்லை எனவும் பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுவரை அம் மின் மாற்றியையும் இடம்பெயரச் செய்ய வில்லை எனவும் இப்பிரச்சினைத் தொடர்பாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தை நாடவுதை தவிர்த்து தங்களுக்கு வேறு வழி தெரியவில்லையென அவர்கள் தற்போது தெரிவிக்கின்றனர்.


















