கும்பகோணம், மார்ச். 09 –
கும்பகோணத்தில் நேற்று அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட காட்சிகளின் சார்பில் மத்திய அரசு தொடர்ந்து 28 முறைக்கு மேல் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்த்தி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் படி ஆதரவளித்தும், மேலும் அதனால் ஏழை நடுத்தர மக்களை வஞ்சிக்கும் படியும் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு எதிராகவும் பட்ஜெட்டிற்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், எல்ஐசி, ஏர்போர்ட், ரயில்வே போன்ற அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே எனவும், கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாத்திட ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடிக்காதே என்றவாறும், மேலும் விவசாயிகளுக்கான அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி, நிலவும் உரத் தட்டுப்பாட்டுகளை உடனே நீக்கிட வேண்டுமெனவும், தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், ஜிஎஸ்டி பிடியிலிருந்து மக்களை பாதுகாத்திடு, இந்தியைத்திணித்து இந்திய ஜனநாயக மரபுகளை கூட்டாட்சி தத்துவத்தையும் சீர்குலைக்காதே, கிராமப்புற மக்களின் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி 600 ரூபாய் கூலியை வழங்கி ஏழை எளிய மக்களுக்கு உடனே கிடைத்திட ஆவணம் செய்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியவாறு முழக்கங்களை எழுப்பி, அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய பொதுச் செயலாளர் மாதவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசிகரன் மாவட்ட தலைவர் எம் எஸ் கே மாநகராட்சி தலைவர் பாஸ்கர் விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் துணைப் பொதுச் செயலாளர் தளபதி சுரேஷ் மாவட்ட செயலாளர் தை சேகர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





















