திருமுல்லைவாயல், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
சென்னை ஆவடி அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள Vgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசிக்கும் வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியரின் 7 மாத குழந்தை கிரண்மயி என்பவர். அவருக்கு அவரது தாய் குடியிருப்பு பகுதியில் உள்ள பால்கனியில் உணவு ஊட்டிக் கொண்டிருக்கும் போது தாயின் கையில் இருந்து தவறி கிரண்மயி கீழதளத்தில் உள்ள பிளாஸ்டிக் கூறையின் விழுந்துள்ளார்.
உடனடியாக குழந்தையின் தாய் கூக்குரலிட்டதை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அச்சம்பவத்தை உணர்ந்து அனைவரும் அக் குழந்தையை மீட்கும் பணியில் பரபரப்பாக ஈடுப்பட தொடங்கினார்கள்.
இதையடுத்து குடியிருப்பு வாசிகள் கீழே பெரிய அளவிலான பெட்ஷீட் வைத்து குழந்தையை காப்பாற்ற முயல்வதும் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி வழியாக சிலர் கட்டிடத்தின் மேலேறி உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
குழந்தை கை கால்களில் சிறிய சிராய்பு காயங்களுடன் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை கீழே விழுந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் திடீரென சத்தம் கேட்டதும் வெளியே வந்து பார்த்த போது குழந்தை ஒன்று மேற் கூறை மீது விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் பதறிப் போன குடியிருப்பு வாசிகள் கூச்சிலிடவே அக்கம் பக்கத்தினர் ஒன்று குவிந்து குழந்தையை காப்பாற்ற முயன்றந்ததாகவும் குழந்தை கீழ்நோக்கி மெல்ல மெல்ல தவழ்ந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தையை காப்பாற்றும் வகையில் இரு பெட்சீட்டுகள் மற்றும் மெத்தையை போட்டு தயார் நிலையில் சிலர் காத்திருக்க ஹரி எனும் இளைஞர் சிலர் ஜன்னல் வழியே மெர்குரி மீது ஏறி குழந்தையை பத்திரமாக காப்பாற்றினர்.
மேலும் அக்குழந்தை காப்பாற்றப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கடவுள் கிருபையென அக்குடியிருப்பு வாசிகள் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
























