திருவள்ளூர், ஜூன். 05 –

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 14.5 ஏக்கர் அரசு நிலத்தை சோப் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்தாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக நடந்த விசாரணையில் இன்று அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு சார்பாக வருவாய் ஆய்வாளர்கள் அந்நிலத்தை அளந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தினார்கள்.

ஊராட்சி சார்பாக ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்டது. பின்பு ஊர் சார்பாக பொதுமக்களும் ஊர் தலைவர்கள் ஒன்று கூடி காரகவோசை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

மேலும் இந்த ஆக்கிரமிப்பு நிலத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பழமையான முருகன் கோயில் இருந்தது அந்த  கோவிலில் ஊர் மக்கள் ஒன்று கூடி விழா எடுத்து வந்துள்ளனர். இதனால் கடந்த 25 ஆண்டுகளாக ஜெயா சோப் என்ற தனியார் நிறுவனம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து செய்து வைத்திருந்ததாகவும்,

கோவிலுக்கு சென்று வழிபட முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அரசு அதிகாரிகள் நிலத்தை மீட்டு எடுத்ததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

அனைவரும் அப்பகுதிக்கு சென்று அங்கு அமைந்துள்ள முருகர் ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானை வழிபட்டு அரோகரா என்று முழக்கமிட்டு வணங்கி சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here