தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே ராஹத் என்ற நிறுவனம் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பங்குத்தொகை வழங்கப்படும் என விளம்பரம் கூறி பல பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றது.
அது தொடர்பாக 8 பேர் மீது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கை குற்றப்பிரிவு காவல் துறையினர் முறையாக விசாரிக்கவில்லை எனவும், ராஹத் நிறுவனத்தின் சொத்துகளை முறையாக பறிமுதல் செய்யவில்லை. எனவும், எனவே வழக்கு விசாரணை அதிகாரிகளை மாற்ற வேண்டும் எனவும், மேலும் அவ் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேலும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என மழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி.ஜப்ருல்லா திருவாரூர்.