தஞ்சாவூர், பிப். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சுமார் 630 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அப்பகுதியில் வசித்து வருதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டுமெனில் இங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளதாக புகார் தெரிவித்தனர். அதன் அப்பகுதியில் பகுதி நேர நியாயவிலை சிறப்பு அங்காடி அமைத்துத் தர வேண்டி பலமுறைகள் தெரிவித்தும் இதுவரை எவ்வித பதிலோ அரசுத் தரப்பில் துரித நடவடிக்கையோ எடுக்காததால் எங்களுக்கு வேறு வழியில்லை என்கிறப் போது, தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புளியக்குடி ஊராட்சி,  வடக்குதோப்பு புளியக்குடியில் சுமார் 630 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.மேலும் அவர்கள் தங்களது  குடும்ப அட்டை மூலம் அரசு நியாய விலைக் கடையில் தேவையான அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு அந்த பகுதியில் செல்லும் ரயில்வே லைனை கடந்து, சுமார் 5-கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய கடுமையான நிலை இருந்து வருவதாகவும், அதனால் தங்கள் பகுதிக்கு புதிய பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் என புளியக்குடி வடக்கு தோப்பை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து  வந்த நிலையில், இதுவரை அரசு எந்தவித  நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை எனக் கூறி, புளியக்குடி வடக்கு  தோப்பு பகுதிக்கு பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையான  புத்தூர் பகுதி   சாலையில்  அமர்ந்து  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத் தகவலறிந்து அங்கு விரைந்து வந்த அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர் இளவரசு மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட ஆண்கள் பெண்கள் என சுமார் 100-மேற்பட்ட நபர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here