பொன்னேரி, ஜூலை. 02 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ளது திரௌபதியம்மன் ஆலையம். அவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைப்பெறும். இந்நிலையில் அச்சாமி ஊர்வலம் தங்கள் கிராம மான கண்டிகைக்கும் வர வேண்டும் எனவும், மேலும் அச்சாமி ஊர்வலத்தை தங்கள் கிராமத்திற்கு வர விடாமல் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து, அக்கிராம மக்கள் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள லிங்கு பையன் பேட்டை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் திரௌபதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டு, அவ்வாலயம் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைப்பெறுவது வழக்கமாகும் அதனைத்தொடர்ந்து அவ்விழாவிற்காக  அவ்வூர் மக்கள் 10 நாட்கள் காப்புகட்டி, விரதம் இருந்து அத் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

மேலும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைப்பெறும் சாமி ஊர்வலம், நடைப்பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் அக்கிராமத்தை சுற்றியுள்ள கொளத்தூர், கண்டிகை, பெரும்பேடு, அரவாக்கம், சத்திரம், பெரிய மனோகரம், சின்ன மனபுரம், லிங்குபையன் பேட்டை உள்ளிட்ட 8 கிராம மக்களுக்கும் பொதுவாக நடைப்பெறும் இத்திருவிழாவின் சாமி ஊர்வலம், அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதாகவும், ஆனால் தங்கள் கிராமமான கண்டிகைக்கு மட்டும் வருவதில்லை என அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இத்திருக்கோயிலின் மூலத்தெய்வமான திரௌபதி அம்மன் தங்கள் கிராமத்திற்கும், வரவேண்டுமெனவும், மேலும் அச்சாமி ஊர்வலத்தை தங்கள் கிராமத்திற்கு வர விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அக்கிராம மக்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் அதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் செல்வக்குமார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். தொடர்ந்து நடைப்பெற்ற அப்பேச்சுவர்த்தை சுமூகமாக முடிந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here