ராமநாதபுரம், ஏப்.

தமிழகத்தில் நல்லாட்சியை சீர்குலைக்க ஸ்டாலின் தேவையற்ற நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். திமுக., ஆட்சியில் நிலவிய மின் வெட்டு, 2011ல் முதல்வர் ஜெ., தலைமையிலான அதிமுக., ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது, என ராமநாதபுரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: மத்தியில் நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். மோடி பிரதமரானால் நாடு வளம் பெறும். ஒருமித்த கருத்துடைய பாஜ., அதிமுக கூட்டணி மெகா கூட்டணி . உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்புகள் அதிக கரித்துள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் ஊரணிகள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக., நிறைவேற்றாது. முதல்வர் தெருவில் நின்று பேசுவதாக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார். அதிமுக., பாஜக, கூட்டணி வலுவான கூட்டணி . மக்கள் செல்வாக்கு மிக்க கூட்டணி . கல்வி மறுமலர்ச்சி ஏற்படுத்தி உள்ளோம். திமுக., ஆட்சியில் நிலவிய மின் வெட்டு, 2011ல் முதல்வர் ஜெ., தலைமையிலான அதிமுக., ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பேணி காப்பதில் நாட்டிலேயே தமிழகம் சிறப்பிடம் பிடித்துள்ளது . தமிழக நல்லாட்சியை சீர்குலைக்க ஸ்டாலின் தேவையற்ற நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். தமிழகத்தில் நிலையான ஆட்சி தொடரவும், வளமான தமிழகம் அமைய அதிமுக., பாஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். ராமநாபுரத்தில் சட்டக்கல்லூரி அமைக்கப் பட்டுள்ளது. கலாம் பெயரில் அரசு கலைக்கல்லூரி ராமேஸ்வரத்தில் நிறுவப்பட உள்ளது. ரூ.25 கோடி மதிப்பில் கீழக்கரை ரயில்வே மேம்பாலம், ரூ.34 கோடியில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சர் மணிகண்டன் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் விரைவில் வழங்கப்படும். ராமநாதபுரம் வளர்ச்சிக்காக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வைத்துள்ள கோரிக்கைகள் ஒவ் வொன்றாக நிறை வேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மருத்துவ கல்லூரியும் விரைவில் வரும். ரூ.8 ஆயிரத்து 852 கோடி மதிப்பில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. வளமான பாரதமும் வளருகின்ற தமிழகமும் அமைந்திட நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

தமிழக மக்கள் எழுச்சி கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வரிடம் கடிதம் வழங்கினர்.

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், தொகுதி கழக இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்கள் அலைகடலென திரண்டு வந்து பங்கேற்றதை கண்டு முதல்வர் பிரமித்து அமைச்சர் மணிகண்டனிடம் தொகுதியை சிறப்பாக வைத்துள்ளீர்கள் என்று அமைச்சரை வெகுவாக பாராட்டினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here