திருவாரூர், ஏப். 01 –

உலக புகழ் பெற்றதும், மேலும் ஆசியாவின் மிகப்பெரிய தேருமான திருவாரூர் ஆழித்தேரின் தேரோட்டம் இன்று இந்நகரில் நடைபெற்றது. மேலும், இத்திருத்தேரோட்டத்தை பார்க்க தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்நகருக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி ஆழி திருத்தேரோட்டத்தை பார்க்க இரண்டு நபர்களும், திருவையாறு பகுதியைச் சேர்ந்த 4 நபர்கள் வந்திருந்த நிலையில் தேரோட்டம் முடிந்து, அவர்கள் திருவாரூரில் இருந்து கும்பகோணம் வழியில் கார்களில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு பகுதியில் அவ்விருக் கார்களும் நடு ரோட்டில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

மேலும் இவ்விபத்தின் போது, கார்களில் முன்புறமுள்ள காற்று பைகளினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இருந்த போதும் இரண்டு கார்களும் நேருக்கு நேர் கடுமையாக மோதிக் கொண்டதால் திருவாரூரில் இருந்து கும்பகோணம் வழியாக திருவையாறு சென்ற காரில் பயணித்த நான்கு நபர்களில் இரண்டு நபர்களுக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும், அதுப்போல கும்பகோணத்திலிருந்து ஆழி தேரோட்டத்தை பார்க்க திருவாரூக்குக்கு  காரில்  சென்ற இரண்டு நபர்களில் ஒரு நபருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தினைத் தொடர்ந்து படுகாயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு, அதில் அவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப் பட்டுள்ளார்கள். மேலும் இதுக்குறித்து குடவாசல் தாலுகா காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here