கும்பகோணம், பிப். 3 –
மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் திருக்கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு படிச்சட்டத்தில் பொருத்தப்பட்ட ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான 15 கிலோ வெள்ளி தகடு திருடப்பட்ட வழக்கில் திருக்கோயில் பட்டர் சீனிவாச ரெங்கர் மற்றும் முரளிதர தீட்சிதர் ஆகிய இருவரை கைது செய்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயில் உற்சவ மூர்த்தியை தூக்கிச் செல்ல பயன்படுத்தும் மரச்படிச் சட்டத்தின் மீது போர்த்தப்ட்டிருந்த 15 கிலோ எடையிலான வெள்ளி தகடுகள் கடந்த 2014ம் ஆண்டு களவு போனது இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய முடியவில்லை அதே நேரத்தில் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் திருடப்பட்ட பழையபடி சட்ட வெள்ளி தகடுகளை உருக்கி அந்த படிசட்டத்திற்கு புதியதாக வெள்ளி தகடுகள் தயார் செய்வதாக, சென்னை கேகே நகர் வெங்கட்ராமன் என்பவர் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு அளித்த மனுவின் படி பூர்வாங்க விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், இது உண்மை என தெரிய வந்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் ஸ்ரீனிவாச ரெங்க பட்டர் (58), மற்றும் முரளிதர தீட்சிதர் (48) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர் மயிலாடுதுறையில் உள்ள ஏ ஆர் சி காமாட்சி ஜுவல்லரிலிருந்து புதிதாக தயார் செய்யப்பட்ட15 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட இருவரும் இன்று முறைப்படி சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசாரால் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.





















