மறைமலைநகர், சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் புத்தாண்டு பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் அவ்விழாவில் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளான வில்லு பாட்டு, தமிழிசை நடனம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பறை இசை மற்றும் பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றது. அப்போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள், சமூக பணியில் ஈடுபட்டு வருபவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர்க்கு சான்றிதழ்கள், கேடையங்களை வழங்கி பாராட்டப் பட்டனர்.
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவில் மறைமலைநகர் நகரமன்ற தலைவர் சண்முகம், காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.






















