தமிழ்நாடு அரசு  புதிய விருதான தகைசால் தமிழர் விருது  என்ற விருதினை உருவாக்கி ஆணைப்பிறப்பித்திருந்தது. அந்த விருதினை  தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கிடும் என தெரிவித்து இருந்தது.

அதற்காக தனிக்குழுவும் ஏற்படுத்தி தேர்வாளர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்வார்கள்

சென்னை, ஜூலை 28-

இன்று ஜூலை 28 தலைமைச்செயலகத்தில் முதல்வர் தலைமையில்  விருதாளர்களைத்தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

அக்கூட்டத்தில் இளம் வயதிலயே பொது வாழ்க்கையில் ஈடுப்பட்டு மாணவத்தலைவராகவும்,சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், அரும் பணியாற்றியதுடன் தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி சமீபத்தில் 100 வயதை கடந்த தமிழர் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்  என்.சங்கரய்யா அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான ‘ :கைசால் தமிழர் ‘ விருதுக்கு அவர் பெயர் பரிசீலிக்கப் பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

தகைசால் தமிழர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரையா அவர்களுக்கு பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் நாள் நடைப்பெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here