திருவள்ளூர், மார்ச். 31 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் 2014, 2019 என 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட மோடி தலையிலான பாஜக அரசு கூறிய வாக்குறுதி ஏதையேனும் மோடி நிறைவேற்றனாரா கேள்வி எழுப்பினார். மேலும் ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என கூறிய நிலையில் இருந்த வேலை வாய்ப்புகளும் பறிபோயுள்ளதுதான் இன்றைய பாஜக அரசின் சாதனை என குற்றம் சாட்டினார்.

இந்துத்வா என கூறி நாட்டை பிளவுபடுத்தும் கட்சி பாஜக என்றார். மேலும் 15 லட்சம் பணம் தருவதாக கூறிய நிலையில் இறுதியில் ஜூம்லா என கூறுகின்றனர் எனவும்,  பணமதிப்பிழப்பில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதை அப்போது குறிப்பிட்டார். வரலாறு காணாத மழை வெள்ளத்தின் போதும் தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வராத மோடி மேலும் பாதிக்கப் பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிதியுதவியும் கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்ட அவர் தற்போது எந்த முகத்தை வைத்து இங்கு வாக்கு கேட்டு வருகிறீர்கள் என மோடிக்கு செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.

நல்ல வாயன் சம்பாதித்தை நார வாயன் அழிக்கிறான் என கிராமங்களில் கூறுவது போல, காங்கிரஸ் கட்சி சம்பாதித்த சொத்துக்களை பாஜக சாப்பிடுகிறது என குற்றம் சாட்டினர்.  மேலும் குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கும் மோடி,  தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது ஏன் எனவும் அப்போது வினாவினார்.

இந்தியாவிற்கு விடியல் ஏற்பட வேண்டும் என்றும், அதற்கு பாசிச ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் செல்வப்பெருந்தகை கூறினார்.  மேலும் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை கூறுகையில்

எதற்காக அகில இந்திய கட்சியினுடைய வங்கி கணக்கை முடக்கினார்கள் என கண்டித்திருப்பதாகவும், தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு எதற்காக டெல்லி முதலமைச்சரை கைது செய்திருக்கிறீர்கள் எனவும் கண்டித்திருப்பதையும், ஏற்கனவே நீதிமன்றம் கண்டித்த நிலையில் தற்போது ஐநா சபையும் கண்டித்துள்ளது மோடியின் வீழ்ச்சிக்கும்,அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உலகநாடுகளில் இருந்து குரல் எழுப்பப்படுகிறது எனவும்,  இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

400 தொகுகளுக்கு மேல் தோல்வியடைய போவதை மோடி மாற்றி சொல்லி வருவதாகவும், இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற போவதாகவும் அப்போது அவர் கூறினார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் பத்திர விவரங்களை பொது இடங்களில் வெளியிட மறுத்தது ஏன் எனவும், அடுத்ததாக பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பாக அடுத்து வரவுள்ளதாக கூறினார். உச்சநீதிமன்றமும், ஐநா சபையும் கண்டிக்கின்றது என்றால் பாஜகவின் பாசிச ஆட்சியை மக்கள் புரிந்து வைத்துள்ளதாக கூறினார்.

முன்னதாக பிரச்சார கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சசிகாந்த் செந்தில் சென்னை – கும்மிடிப்பூண்டி மார்கத்தில் 4 வழிப்பாதையாக மாற்றிட வேண்டும், மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றிட துணையாக இருப்பேன் என உறுதியளித்தார்.

 

பேட்டி:

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் தலைவர்)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here