காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பஜார் வீதியில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1.70 மதிப்பிலான குட்கா போலீசார் நடத்திய சோதனையில் பிடிப்பட்டது. அதனை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கா\ஞ்சிபுரம், செப். 29 –
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்து வருவதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலில் பேரில் சாலவாக்கம் பஜார்வீதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது விற்பனைக்காக வைத்திருந்த 1.70 லட்சம் மதிப்பிலான பான் மசாலா மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்
மேலும் சட்ட விரோதமாக குட்கா பதுக்கிய கானாராம் (40) மற்றும் சுத்ராராம் (22) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் குட்கா, பான்மசாலா பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் குறித்து தகவல்களை காவல்துறையினருக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொண்டு தொலைபேசி எண்கள் வெளியிடபட்டுள்ளது
044- 27238001,
044- 27236111