திருவண்ணாமலை, ஜூலை.26-

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து சமீபத்தில் கொரோனா தொற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த, மற்றும் விபத்தில் ஒரு காலை இழந்த கிராம நிர்வாக அலுவலர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஆ.ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜெயசந்திரன், மாவட்ட துணைத் தலைவர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் அ.ஏழுமலை அனைவரையும் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில செயலாளர் என்.சுரேஷ், செய்யாறு வட்டத்தில் பணிபுரிந்து உயிரிழந்த முன்னாள் வட்ட தலைவர் நாகராஜன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் சேத்துப்பட்டு வட்டத்தில் பணிபுரிந்து உயிரிழந்த சீனுவாசன் குடும்பத்திற்கு ரூ.1லட்சம் செங்கம் வட்டத்தில் பணிபுரிந்து உயிரிழந்த வட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு ரூ.1லட்சம் சாலை விபத்தில் ஒரு காலை இழந்த கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் பணி புரிந்து வந்த தேவதாஸ் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவிகளை வழங்கினார்.
இதில், மாவட்ட அமைப்பு செயலாளர் மகாலிங்கம், மாவட்ட இணை செயலாளர்கள் சீனிவாசன், பிரவீன்குமார், மேகநாதன், போராட்டக்குழு தலைவர் ரகுராமன், மாவட்ட பத்திரிகை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், கோட்ட செயலாளர்கள் கோதண்டராமன், பழனி, மற்றும் திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் செங்கம் தண்டராம்பட்டு ஆரணி போளூர் கலசபாக்கம் ஜமுனாமரத்தூர் செய்யாறு வந்தவாசி வெம்பாக்கம் சேத்துப்பட்டு ஆகிய வட்ட தலைவர்கள் வட்ட செயலாளர்கள் மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here