திருவண்ணாமலை ஜன. 28 –

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. பிப்ரவரி 4ந் தேதிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் நடைபெறும். அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் வேட்புமனுதாக்கல் நடைபெறும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 5ந் தேதி நடைபெறவுள்ளன. வேட்புமனுவை 7ந் தேதி திரும்பப் பெறலாம். வாக்குப்பதிவு பிப்ரவரி 19ந் தேதியும் மற்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந் தேதியும் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் சுவர் விளம்பரங்கள் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

   ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 54,881 வாக்காளர்கள் உள்ளனர். 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. மொத்தம் 142135 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இங்கு 144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. மொத்தம் 32494 வாக்காளர்கள் உள்ளனர். 40 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. மொத்தம் 26764 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இங்கு 34 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4நகராட்சிகளில் 123 வார்டுகள் உள்ளன. மொத்தம் 256274 வாக்களர்கள் வாக்களிக்க உள்ளனர். செங்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் 23572 வாக்காளர்கள் உள்ளனர். சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் 16379 வாக்காளர்கள் உள்ளனர். தேசூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. மொத்தம் 4226 வாக்காளர்கள் உள்ளனர். களம்பூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. மொத்தம் 11752 வாக்காளர்கள் உள்ளனர். கண்ணமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. மொத்தம் 6926 வாக்காளர்கள் உள்ளனர். கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. மொத்தம் 12094 வாக்காளர்கள் உள்ளனர். பெரணமல்லூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இங்கு 4856 வாக்காளர்கள் உள்ளனர். போளூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் 21981 வாக்காளர்கள் உள்ளனர். புதுப்பாளையம் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. மொத்தம் 9719 வாக்காளர்கள் உள்ளனர். வேட்டவலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. மொத்தம் 13541 வாக்காளர்கள் உள்ளனர். 10 பேரூராட்சிகளில் 150 வார்டுகள் உள்ளன. மொத்தம் 125051 வாக்காளர்கள் உள்ளனர். 172 வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 381325 பேர் வாக்களிக்க உள்ளனர். 455 வாக்குச்சாவடிகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும் விதிமீறல்களை தடுக்கவும் 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சிததுறை அதிகாரிகள் போலீசார் பறக்கும் படை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here