சென்னை: நவ.13-
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் சுற்றச்சூழல் பாதகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப் படும் சிறந்த குறும் படத்திற்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கி கவுரவ படுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அச்செய்தி வெளியீட்டில் தமிழகம் முழுவதும் மொத்தம் 8000 பள்ளிகளில் மாவட்டத்திற்கு 250 பள்ளிகள் வீதம் சூழல் மன்றங்களுக்கு 40 முதல் 50 மாணவர்களைக் கொண்டு தேசிய பசுமைப்படை செயல்படுகிறது.
மேலும், தமிழக அரசின் நிதியுதவியுடன் 11469 பள்ளிகளில் தமிழ்நாடு முழுவதும் சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சுற்றுச்சூழல் துறையை உருவாக்கியதன் நோக்கங்களில், முக்கியமான ஒன்றாகும். திட்டமிடாத மற்றும் நாகரீகமற்ற செயல்பாடுகள் மனித நலனுக்கும் சூழல் அமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மனதில் ஆழப்பதிய வைப்பது அவசியமாகும்.
பள்ளி வளாகத் தூய்மை, மரம் நடுதல், விழிப்புணர்வுப் பேரணிகள், ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஆறு பசுமை தினங்களை கொண்டாடுதல், மண்புழு உரம் தயாரித்தல், சுற்றுச்சூழல் கண்காட்சி, சுற்றுச்சூழல் போட்டிகள், பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரச்சாரம், சூழல் விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சிகள், இயற்கை முகாம்கள் போன்ற சூழல் விழிப்புணர்வு பணிகளில், தேசிய பசுமைப்படை மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இருப்பினும், பிரபலமான, நவீன நுட்பங்களும், இலகுவாக சென்றடையக் கூடிய ஊடகங்களின் வலிமையும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவிப்பின் படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நிலம், காற்று, நீர், வனம், தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில், பொது ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஏதுவான தக்க, தரமான விளம்பரப்படங்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள்/திரைப்பட இயக்குநர்கள்/ திரைப்பட பயிற்சி மையம் மற்றும் திரைப்பட துறையில் அனுபவம் உள்ள தனி நபர்களிடமிருந்து சுற்றுச்சூழல் துறைக்கு 20 /12/2019 மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.
சிறந்த முதல் மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுத் தொகையாக முறையே ரூ.7,00 இலட்சம், ரூ.6.00 இலட்சம், மற்றும் ரூ.5.00 இலட்சம் வழங்கப்படுவதோடு சான்றிதழும் வழங்கப்படும்.
- விளம்பர விழிப்புணர்வு விளம்பப்படம், மாநிலத்தின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை பிரதிபலிக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை அது தொடர்பான பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் விதத்தை தெரிவிக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.
- விருது பெறுவதற்காக பெறப்படும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விளம்பரப்படங்கள் அனைத்திற்கும் சுற்றுச்சூழல் இயக்குநர், சட்டபூர்வ உரிமையாளர் ஆவார். தயாரிப்பாளரின் அனுமதியின்றி விளம்பரப் படங்களை மாற்றம் செய்ய/திருத்தம்/செய்ய சுற்றுச்சூழல் துறை இயக்குநருக்கு அதிகாரம் உள்ளது.
- விழிப்புணர்வு விளம்பர படம், தமிழ் மொழியில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும்.
- விளம்பர படம் இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- விளம்பர படம்( High Definition HD MP Formet ) ல் சமர்பிக்கப் படவேண்டும்
- விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விளம்பர படத்தினை, அதன் தயாரிப்பாளர், (DBX MOVIE) க்கு மாற்றம் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
- சமர்பிக்கப்படும் விளம்பர படம் இதற்கு முன்பு எந்த ஒரு விளம்பர பட போட்டியில் பங்கு பெற்று தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் பெற்று இருந்தால் அப்படம் நிராகரிக்கப்படும், விளம்பர படம் புதியதாக தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும்
- விருது பெறுவதற்காக பெறப்படும் அனைத்து விழிப்புணர்வு திரைப் படங்களும், தேர்வு செய்யப் பட்டாலும், தேர்வு செய்யப் படவில்லை யென்றாலும், அதை தயாரித்தவர் களுக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது. அதற்கான கௌரவ வெகுமதியும் வழங்கப்பட மாட்டாது.
- தேர்ந்தெடுக்கப் பட்ட விளம்பர படம், விளம்பரம் படுத்தும் போது, அதில் அதன் தயாரிப்பாளரின் பெயர் திரையிடப்படும்.
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு திரைப்படங்கள், தயாரிப்பாளரின் சொந்த கரு, கதையம்சம் கொண்டதாக இருக்க வேண்டும். பிற திரைப்படங்களில் கரு, இருப்பதாக பின்னனாலில் புகார் பெறப்படின், அதற்கு தாங்களே பொறுப்பாளியாவர்.
- ஒருவரே, எத்தனை விழிப்புணர்வு படங்களும் தயாரித்து விருது பெறுவதற்கு அனுப்பலாம்.
- விழிப்புணர்வு படத்தில் வரும், கதாபாத்திரம், தமிழ்நாட்டில் எவரை யேனும் குறிப்பிடும் படியாக இருக்கக் கூடாது.
- விழிப்புணர்வு விளம்பர படத்தின் கரு, கதையம்சம் அரசின் எந்தவொரு திட்டங்களையும் கேலி செய்யும் விதமாக இருக்கக்கூடாது.
- விருதுக்கு வரும் விழிப்புணர்வு விளம்பர படங்களை, தேர்வு செய்யும் அதிகாரம், அரசால் அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவிற்கு உண்டு. அக்குழுவின் தேர்வே, இறுதித் தேர்வாகும்.தேர்வு செய்யப்பட்ட பின் அதை மறுபரிசீலனை செய்ய கோருதல், கோருவதற்கு இடமில்லை/அனுமதி இல்லை.
- தேர்வு செய்யப்பட்ட விளம்பர படங்களின் நகல்கள், ஊடகங்கள் இவ்வலுவலக இணையதளம், வலைதளம், மற்றும் ஏனைய அரசு சார்ந்த இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்யப்படும். மேலும், பள்ளிகளில் நடைபெறும் தேசிய பசுமைப்படை, மற்றும் சுற்றுச்சூழல் மன்ற நிகழ்ச்சிகளிலும் திரையிடப்படும்.
- மேற்கண்டவாறு தேர்வு செய்யப்பட்ட விளம்பர படங்கள் 20/12/2019 அன்று மாலை 5.00 மணிக்குள் அல்லது அதற்கு முன்னர் இத்துறையில் பெறப்படவேண்டும் இயக்குநர் சுற்றுச்சூழல் துறை தரை தளம், பனகல் மாளிகை சைதாப்பேட்டை, சென்னை-600 015 தொலைபேசி- 044-24336421 மின் அஞ்சல் : tndoe@tn.nic.in website : www.environment.tn.nic.in