மீஞ்சூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வி.ஆர்.பகவான் தலைமையில் தொடங்கியது.
மேலும் இத்திருவிழா வருகிற 28 ஆம் தேதி வரை 13 நாட்கள் விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு ஒவ்வொரு தினமும் சிம்ம வாகனம் சூரிய பிரபை பூத வாகனம் நாகவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிவபெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மேலும் அத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக எதிர் வரும் 21 ஆம் தேதியன்று திருத்தேராட்டமும், 24 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 28 ஆம் தேதி 108 சங்காபிஷேகத்துடன் நிறைவு விழாவும் நடைபெறுகிறது.
மேலும் இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு, சிவபெருமானை தரிசனம் செய்தனர். கொடியேற்று விழா சிவாச்சாரியார் விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
அவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கோவில் அறங்காவலர் மருத்துவர் அருண் சிறப்பாக செய்திருந்தார். கொடியேற்று விழாவில் விழா குழுவினர் மருத்துவர் எம் .விஜயராவ் சுப்பிரமணி வெங்கடேசன் பட்டாபிராமன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத் தலைவர் அலெக்சாண்டர் கோதண்டம் சங்கர் மாரி சுப்பிரமணி அறநிலைத்துறை கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.