சோழவரம், டிச. 16 –

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி – ஜீவா தம்பதியர் அவர்களுக்கு விஸ்வா (12), சூர்யா (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் விஸ்வா 7 ஆம் வகுப்பும், சூர்யா 6 ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முதலே சோழவரம் சுற்று வட்டார பகுதிகளில் மழை விட்டுவிட்டு இன்று காலை வர் பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள மோட்டார் பம்ப்செட்டிற்கு சென்ற போது அங்கிருந்த இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதுக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சோழவரம் போலீசார் முதற் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். அதன் பின்பு உயிரிழந்த சிறுவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அச் சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here